October 27, 2021

ஆந்திராவில் இருந்து 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 110 கஞ்சாவை, போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்து கஞ்சா கடத்திய 2பெண் உட்பட 6 பேரை கைது …

1 min read
Spread the love

ஆந்திராவில் இருந்து 2 கார்களில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சென்னை மாதவரம் ரவுண்டானாவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அப்போது இரண்டு கார் வேகமாக ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த கார்களை மடக்கி போலிசார் சோதனையிட்ட போது, காரின் உள் இருந்த சாக்கு மூட்டைகளில் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 2 கார்களிலும் கஞ்சா கடத்திய 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த தனலஷ்மி(56) என்பவர், ஆந்திர மாநிலம் அன்னாவரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும், தனலஷ்மி கஞ்சா கடத்தல் தலைவி என்பதும், திண்டிவனம் பகுதியில் சாராய வழக்குகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 2 கார்களை பறிமுதல் செய்த போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், திண்டிவனத்தை சேர்ந்த மேகலா(32), நந்தகோபால்(31), சங்கர்(48), வெங்கடேஷ்(34) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் சிட்லபாக்கத்தை சேர்ந்த மோகன்ராஜ்(27) ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed