October 27, 2021

கும்மிடிப்பூண்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் முன்னிலையில் நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாரம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலமாக சமுதாய வளைகாப்பு 400 கர்ப்பிணிகளுக்கு நடத்தப்பட்டது. தங்க நாட்கள் 1000 நாட்கள் முக்கியத்துவம் பற்றியும் கர்ப்பிணிகளுக்கு கூறப்பட்டது.

ரத்த சோகை, குள்ளத்தன்மை , மெலிவு தன்மை , எடை குறைவான குழந்தை பிறத்தலை தடுத்தல் முக்கியத்துவம் பற்றி கர்ப்பிணிகளுக்கு கூறப்பட்டது .

மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் , பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. சத்தான உணவு பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புடன் 5 வகையான மதிய உணவு வழங்கப்பட்டது .

நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராசன் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் கே.வி.ஜி உமாமகேஸ்வரி கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மாலதி குணசேகரன் மாவட்ட கவுன்சிலர் சாரதா முத்துசாமி , ராமஜெயம்

கீழ் முதலாம் பேடு தலைவர் நமச்சிவாயம் கவுன்சிலர் இந்திரா திருமலை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்து நடத்திய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ஞானமணி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் எழிலரசன் , லில்லி குமார் மேற்பார்வையாளர் 1& 2 வசந்தா, அமுதா, குமுதா, காமாட்சி , ஜமுனா அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சுந்தர் நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed