October 27, 2021

திருத்தணி அருகே 13 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள், வெடிபொருட்கள் வெடிகுண்டுகளை செயலிழக்கம் செய்து வருகின்றனர்…

1 min read
Spread the love

கடந்த 2008-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரும்பு உருக்கு ஆலையில் வெடிபொருட்கள் விபத்து ஏற்பட்டது வெளிநாட்டிலிருந்து கும்முடிபூண்டி இரும்பு உருக்காலைக்கு கப்பல் மூலம் எடுத்து வரப்பட்ட பழைய இரும்பு பொருட்கள் ராக்கெட் லாஞ்சர்கள் துப்பாக்கி குண்டுகள் போன்ற பயங்கர வெடிபொருட்கள் வெடிமருந்துகள் இருந்துள்ளது,

அதனை அப்போது அந்த பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை அகதிகள் கூலித் தொழிலாளர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அதன் பின்னர் இந்த வெடி பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் செயலிழக்க நடவடிக்கை மேற்கொண்ட போது அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எஸ். கே.வி.கண்டிகையில் செயல்படும் கல்குவாரியில் வெடிமருந்துகள் வெடிபொருட்கள் ஆகியவற்றை பத்திரமாக எடுத்து வரப்பட்டது. 13 ஆண்டு காலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த இந்த ராக்கெட் ராக்கெட் லாஞ்சர்கள் வெடிபொருட்கள் ஆகியவற்றை செயலிழக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி திருத்தணி அடுத்த எஸ்.கே.வி புரம் பகுதியில் உள்ள கல்குவாரி அருகே விவசாயிகள் ஆடு ,மாடு மேய்க்கும் பொதுமக்கள் கடந்த ஏழு நாட்களாக ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வராமல் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து தற்போது 10 டன் எடை கொண்ட வெடிப் பொருட்களை செயலிழக்கும் பணியில் ராணுவத்துறையினர் மற்றும் வருவாய், காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் – லெனின்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed