October 27, 2021

சாத்தூரில் உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்ற அதிமுகவினர் இடையே அடிதடி, கைகலப்பு ….

1 min read
Spread the love

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்கு சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சாத்தூர் வெங்கடசலாபுரம் அருகே சாத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆர்.கே. ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான கட்சி தொண்டர்களுடன் வரவேற்பு அளித்தனர்.

அப்போது கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்கள் வரவேற்பு செய்த போது எடப்பாடி பழனிச்சாமியின் பின்னால் வந்த முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பின் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர்.

இதனையடுத்து ராஜவர்மனின் ஆதரவாளர்களுக்கும் , கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனின் ஆதரவாளர்களுக்கும் உட்கட்சி பூசல் காரணமாக அடிதடி ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் வந்த முன்னாள் ராஜவர்மன் ஆதர்வர்களுக்கும், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கு அடி-தடி ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கி சமாதானப்படுத்தி பின்பு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் – ஜெதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed