October 27, 2021

டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி உள்பட 4 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

1 min read
Spread the love

வட மாநிலங்களான உத்திரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் பல ஆண்டுகளாக பெரிய அளவில் தாதாவாக இருந்து செயல்பட்டு பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வந்த தாதா ஜிதேந்தர் கோகி அதிரடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்மந்தபட்டு உள்ள தாதா ஒரு வழக்கு சம்பந்தமாக இன்று டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது வழக்கம் போல் நீதிமன்ற வளாகம் காலையில் பரபரப்பாக இருந்த சூழ்நிலையில் அறை எண் 207 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக சென்ற போது,

அங்கு ஏற்கனவே வழக்கறிஞர்கள் உடையில் மறைந்து இருந்த ஜிதேந்தர் கோகியின் எதிரிகள் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பயந்து போய் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர்.

இந்நிலையில் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீசார் வழக்கறிஞர் உடையில் இருந்த ரவுடிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார் இரண்டு தரப்பும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் ஜிதேந்தர் உட்பட அவருடைய கூட்டாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.

45 நிமிடத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டை திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு கோர்ட்டு வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என அனைவரையும் மிரள வைத்து உள்ளது. இச் சம்பவத்தின் காரணமாக உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் மேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் உடனடியாக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed