October 27, 2021

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் அவர்கள் ஆய்வு செய்தார்…

1 min read
Spread the love

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஒரு முக்கிய ஸ்தலமாகும். இந்த கோயிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் உலக அளவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள மழையை சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவிற்கு கிரிவலம் செல்வது வழக்கம்.

அதுமட்டு இல்லாமல் தினந்தோரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கக்கூடிய பேருந்துகள் அடிக்கடி மாற்றங்கள் செய்வதுடன் சரியான நேரத்திற்கு செல்வதில்லை எனவும்,

அதேபோல், மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு தான் திருவண்ணாமலை பணிமனை நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனவும், உள்ளூர் பேருந்துகள் இரவு நேரங்களில் சரிவர இயக்கப்படுவதில்லை அதனால் திருவண்ணாமலையை சுற்றி உள்ள குக்கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

(சில தினங்களுக்கு முன் பேருந்து நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்ட பயணிகள் )

என்ற குற்றச்சாட்டுடன் அடிக்கடி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இரவு நேரங்களில் கிராம பகுதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

( இரவு நேரத்தில் பேருந்துகள் இயங்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் )

இது போன்ற பிரச்சினைகளை கலையும் விதமாக , திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் முறைப்படி நிறுத்துவது, பேருந்து நிலையத்திற்கு வெளியே, போக்குவரத்து விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது, சாலைகளில் சிக்னல்கள் இயக்கம் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.

( இரவு-பகல் என்று இல்லாமல் பேருந்து நிலையம் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் மக்கள் )

உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி, போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed