October 27, 2021

கொரோனா பேரிடர் காலத்தில் வணிகர்களுக்கு ஒரு கடுகளவு கூட மத்திய அரசு கடன் கொடுக்கவில்லை, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு…

1 min read
Spread the love

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்கமும், பரமக்குடி வியாபாரிகள் சங்கமும் இணைந்து பரமக்குடி ஆயிர வைசிய ஜவுளி வியாபாரிகள் கல்யாண மஹாலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் ராமநாதபுரம் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் இணைப்பு விழா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜாவிற்கு பாராட்டு விழா சிறப்பாக நடந்தது.

விழாவிற்கு, ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க பொதுச்செயலாளரும், பரமக்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.ஒய்.ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் லயன் பி.ஜெகதீசன், பொதுச்செயலாளர் குப்தா, ஆர்.கோவிந்தராஜன், மாவட்ட பேரமைப்பு அமைப்பாளர் எம்.பெத்தராஜா, மாவட்ட வர்த்தக சங்கத் துணைத்தலைவரும், பரமக்குடி வியாபாரிகள் சங்கத் துணைத்தலைவர் எஸ்.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக சங்க பொருளாளரும், பரமக்குடி வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் ராசி என்.போஸ் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில், பேரமைப்பு மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களைச் சேர்ந்த வியாபாரிகள், வணிகர்கள் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வணிகர்களுக்கு உள்ள சிரமங்களை விரிவாக எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். பரமக்குடி வியாபாரிகள் சங்க பொருளாளர் எஸ்.வி.சுப்பையா நன்றி கூறினார்.
முன்னதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது;

ராமநாதபுரம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும், மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும், மாவட்டத்தில் விரைவு ரயில்களை முறைப்படுத்த வேண்டும், இவற்றிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரை வைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி வரியை மீண்டும் உயர்த்துவதாக மத்திய அரசு பயம் காட்டி கொண்டிறிருக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி உயர்வால் தற்போது கண்ணுக்கு தெரியாமல் ஒரு சோப்பிற்கு ரூபாய் 11 முதல் 12 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் நிறுவனம் சட்டவிதி மீறலுக்கு தள்ளப்பட்டு சாமானிய வணிகர்களை ஒன்றில்லாமல் செய்யக்கூடிய வகையில் செயல்படுகிறது. அவர்களை எதிர்த்து அகில இந்திய வணிகர் சங்கம் தொடர் போராட்டங்களை அறிவித்து இருக்கிறது. இது குறித்து வரும் ஞாயிற்றுக்கிழமை தலைமை நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். பஜார் மற்றும் கோவில்கள் அருகிலுள்ள மதுபான கடைகளை அகற்றப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை கட்டாயமாக ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும். சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய கடுகு, மிளகு, சீரகம் வரை விலையேற்றத்தினால் ஆபத்து உள்ளது. சேவைக்காக தொடங்கப்பட்டது சுங்கச்சாவடிகள், தற்போது வியாபார ரீதியாக சுங்கசாவடிகள் சென்று கொண்டிருக்கிறது. காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். இது சம்மந்தமாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். கொரோனா பேரிடர் காலத்தில் வணிகர்களுக்கு ஒரு கடுகளவு கூட மத்திய அரசு கடன் கொடுக்கவில்லை.

ஜிஎஸ்டி பதிவு உள்ளவர்களை மட்டும் வணிகர் நல வாரிய உறுப்பினர்களாக சேர்க்கக் கூடிய நிலையை மாற்றி சாமானிய வணிகர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க அனுமதித்தது தமிழக அரசு பல்வேறு வியாபாரிகளுக்கு ஆய்வு என்ற முறையில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதற்கு சமாதான கமிட்டி அமைக்கப்பட்டு அந்த வழக்குகளை முடிக்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி, அறநிலையத்துறை கடைகளை முறைப்படுத்துவதில் கமிட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து, தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

கட்டுமான பணிகள் ஏற்கனவே சுனக்கமாக உள்ளது சிமெண்டு, கம்பிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இவற்றில் மீண்டும் 18 சதவீத வரி உயர்வால் ஏற்க முடியாது. நாடு தழுவிய அளவில் அந்த போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் ஆதரவு தர உள்ளது. ஆன்லைன் வணிகத்தில் வெளிநாட்டு சக்திகள் நுழைந்து உள்நாட்டு வணிகர்களை சுரண்டி கொண்டிருக்கிறது . இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

செய்தியாளர் –
மாமு.ஜெயக்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed