October 27, 2021

கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ, டி.ஜே.கோவிந்தராஜன் பூண்டி ஒன்றிய திமுக கவுன்சிலர் வேட்பாளர் காண்டீபனை அறிமுகபடுத்தினார்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம்
பூண்டி ஒன்றிய 3 – வார்டு கவுன்சிலராக இருந்த திமுகவை சேர்ந்த குமார் கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் இறந்து விட்டார் இதன் காரணமாக இந்த பகுதியில் ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் திமுக வேட்பாளராக காண்டீபன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் பூண்டி ஒன்றிய 3 வது வார்டு வேட்பாளர் காண்டீபன் அறிமுக கூட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க மாவட்ட பொருப்பாளரும், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு பேசியதாவது ,

நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கோவிந்தராஜன் ஆகிய என்னை உங்களிடம் அறிமுகப்படுத்தினார். நீங்கள் இன்று என்னை சட்டமன்ற உறுப்பினராக பதவியில் அமரவைத்து இருக்கிறீர்கள். என்னை பூண்டியில் உள்ள பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் நீங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்களையும் உதயசூரியனையும் பார்த்து தான் வாக்களித்தீர்கள்.

அதேபோல் இன்று கவுன்சிலராக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள காண்டீபன் அவர்களையும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என உரையாற்றினார். இந்த வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்ய முடியும் , மாற்று வேட்பாளரை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் எனவும் பேசினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் பகலவன், மாவட்ட பொதுகுழு உறுப்பினர் கதிரவன், ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத், பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், பூண்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தில்லை குமார் ஆகியோர் உட்பட திரளான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed