October 27, 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெறும் 3 வது மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாமை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயது மேற்பட்ட தகுதியுடைய அனைவருக்கும் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மாபெரும் கோவிட் 19 தடுப்புசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி, தச்சம்பட்டு, நவம்பட்டு ஆகிய பகுதிகளில் இன்று சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற இடங்களில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூடுதல் ஆட்சியர் ஆகியோர் உடனிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மூன்றாவது வாரமாக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் 1004 மையங்களில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed