October 27, 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசின் ஜே.ஜே.எம் குடிநீர் திட்டத்தை மாநில அளவில் சிறப்பாக செயல்படுத்திய வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவர் சுதா அவர்களுடன் கானொலி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி பாராட்டு…

1 min read
Spread the love

மத்திய அரசின் ஜல் ஜீவன் இயக்கத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கிய வெள்ளேரி ஊராட்சி, மாநில அளவில் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு கிராம சபை கூட்டத்தின் போது பாரத பிரதமர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா அவர்களுடன் கானொலி காட்சி வாயிலாக உரையாடி பாராட்டினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வரும் 2024 க்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் 360 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு இதில் 1359 குக்கிராமங்களில் உள்ள 1,30,351 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு 82.76 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 706 கிராமங்களில் 88,883 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

ஐல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைத்து வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்த ஊராட்சியாக இந்தியாவில் 5 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளேரி ஊராட்சி மாநிலத்திலேயே சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்ட வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவர் சுதா சுப்பிரமணியன் அவர்களுடன் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வெள்ளேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தின் போது கானொலி காட்சி வாயிலாக உரையாடினார்.

அப்போது பேசிய பிரதமர் , உங்கள் கிராமத்தில் எல்லா வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கிறதா என்றார் அதற்கு தலைவர் சுதா எனது கிராமத்தில் 412 வீடுகளிலும் குழாய்யின் மூலம் குடிநீர் கிடைக்கிறது என்றார்
இதன் மூலம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கஷ்டம் சற்றாவது குறைந்துள்ளதா என்று பிரதமர் கேட்டதற்கு , மிகவும் குறைந்துள்ளது வீட்டு குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதால் அதிக நேரம் மிச்சமாகிறது அந்த நேரத்தை மற்ற பயனுள்ள வேலைகளுக்கு பயன்படுத்துகிறோம் என்றும் இத்திட்டத்தை வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி தெரிவித்துகொள்வதாக தெரிவித்தார்.

மிக நீண்ட காலத்திற்கும் பல ஆண்டுகளுக்கு உங்கள் கிராமத்தில் குடிநீர் தொடர்ந்து இருக்க என்ன முயற்சி எடுத்தீர்கள் என்று பிரதமர் கேட்க, அதற்கு தலைவர் சுதா ஊராட்சியில் இரண்டு செக் டேம் கட்டி உள்ளோம் மேலும் ஏரிகள், குளங்கள் நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு உள்ளது. எதிர் வரும் மழைகாலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வரும் கோடைகாலத்தில் பயன்படுத்தப்படும் என்றார்.

உங்கள் ஊரில் வேறு ஏதாவது சிறப்பு உள்ளதா என்று பிரதமர் கேட்க எங்கள் ஊரில் 20 சதவீகிதம் பேர் பட்டு நெசவு செய்கிறார்கள் ஆரணி பட்டு காஞ்சிபுரம் பட்டு போன்று புகழ்பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார். ஊராட்சி மன்ற தலைவருக்கு பிதமர் நன்றி தெரிவிக்க ஊராட்சி மன்ற தலைவர் சுதாவும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டம் வழங்கிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் தட்சணாமூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், கூடுதல் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed