October 27, 2021

கும்மிடிபூண்டி ஒன்றியம் ஈகுவார்பாளையம் கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவரை பேச அனுமதி மறுக்கபட்டதால், அவர் கோட்டாசியரிடம் புகார்…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி சித்தூர் நத்தம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேச முற்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமாரை பேசவிடாமல் தலைவரின் கணவர் மறுத்ததால், இருதரப்பினர் தள்ளு, முள்ளுவில் ஈடுபட்டனர். அதனால் கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஆகவே, கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்தாமல் , மோதலை உருவாக்க ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முயன்றதாக ஒன்றிய குழு தலைவர் கோட்டாசியரிடம் புகார் மனு வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி சித்தூர் நத்தத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் உஷா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவை சேர்ந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் வருகை தந்திருந்தார்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஈகுவார்பாளையம் ஊராட்சியை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது பதிலளிக்க எழுந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமாரை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் அவர் தரப்பினர் பேச விடாமல் தடுத்தனர்.

அந்த சலசலப்புகளுக்கு இடையே அதற்கு பதிலளித்த ஒன்றிய குழு தலைவர் ஈகுவார்பாளையம் பகுதி ஒன்றிய கவுன்சிலர் என்ற முறையிலும் ஒன்றிய குழு தலைவர் என்கிற முறையிலும் என்னை கிராம சபைகூட்டத்திற்கு அழைக்காத நிலையில் ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர் மற்றும் தலைவரின் கணவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற போது வாய்ப்பளிக்காமல் ஊராட்சி தலைவர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால், ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமாரை அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர், அப்போது இரு தரப்பினர் லேசான கை கலப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கிராம சபை கூட்டம் பாதியிலேயே நின்றது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தகவல் அறிந்து அங்கு போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் தரப்பு மற்றும் ஊராட்சி தலைவர் தரப்பிடையே மோதல் நிலவி தொடர்ந்து இரு தரப்பினரும் அடிக்கடி சலசலப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கிராமசபை கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்காத அது குறித்து ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொன்னேரி கோட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் கிராமசபை கூட்ட அறிவிப்பு நோட்டீஸ் என்னுடைய பெயர் புறக்கணிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த நோட்டீசை கிராமசபை விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தலைவர் உட்பட யாருடைய பெயரும் இல்லாமல் ஆதிக்க புத்தியுடன் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்தில் நாங்கள் யாரும் அது குறித்து பேசவில்லை.

ஆனால், தலைவரின் கணவர் கூறிய குற்றச்சாட்டிற்கு நான் பதிலளிக்க முற்பட்டேன். ஆனால் , தலைவரின் கணவரும் அவருடைய தரப்பினரும் என்னை பேச விடாமல் தடுத்தனர். அதனால் அங்கு சிறிய சலசலப்பு உருவானது. பற்றாளர் மிகவும் காலதாமதமக வந்தார். அதுமட்டும் இல்லாமல் போதிய போலீஸ் பாதுகாப்பும் இல்லாமல் இருந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு பொது மக்கள் வேண்டுகோளை ஏற்று, நான் அங்கிருந்து வெளியேறினேன். என கூறினார்.

அதேபோல் நாம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர் அவர்களை தொடர்பு கொண்டபோது அவர் நம்மிடம் பேச தொடங்கினார். உடனே அவருடைய கணவர் ஸ்ரீதர் அவர்கள் போனை வாங்கி அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்கள் ஊராட்சிக்கு வரவேண்டிய பற்றாளர் வேறு ஒரு ஊராட்சி கூட்டத்தை முடித்துக் கொண்டு கால தாமதமாகத்தான் வந்தார். அதற்கு முன்பாகவே நாங்கள் கூட்டம் துவக்கி நடத்தியது உண்மை தான், ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தான் நான் பேசக்கூடாது. ஆனால், இது கிராம சபை கூட்டம் ஆகவே கிராமத்தில் ஒரு நபர் என்ற முறையில் நான் பேசினேன்.

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் எங்கள் ஊராட்சியை புறக்கணிக்கிறது என்பது உண்மை தான், எங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து அரை மணி நேரத்திற்கு மேலாக நான் விளக்கமாக பேசி முடித்தேன். அப்போதும் கூட சேர்மனின் தரப்பினர் சத்தம் போட்டுக் கொண்டு தான் இருந்தார்கள் இருந்தாலும் நான் பேசுனேன். ஆனால், அவர் பேசும் போது சலசலப்பு அதிகமானது உண்மைதான். ஆனால், அவர் என்ன பேசினார் என்பதும், பேசினாரா இல்லையா என்பதும் எனக்கு தெரியாது.

அவர் கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டு பின்னர் பற்றாளரை போனில் தொடர்பு கொண்டு புறப்பட்டு செல்லுமாறு தொடர்ந்து தொலைபேசியில் கூறினார். கிராமசபை நோட்டீஸ் அவர் பெயர் மட்டுமல்ல ஊராட்சி மன்ற தலைவர் உட்பட வேறு யாருடைய பெயரும் இல்லை அதை ஒரு குறையாக அவர் தரப்பினர் பேசினார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை, கூட்டம் நல்லபடியாக முடிந்தது. என கூறினார்.

G. பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed