October 27, 2021

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் நோய் எதிர்ப்புசக்தி திறன் ஆய்வில், மாநில அளவில் முதலாவதாக உள்ளதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி அவர்கள் தகவல்…

1 min read
Spread the love

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(08.10.2021) 5வது மாபெரும் கொரோனா தடுப்புசி முகாம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாவட்ட ஆட்சத்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற 10.10.2021 அன்று 5வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. 18 வயது பூர்த்தியடைந்த 15 இலட்சம் நபர்களில் இதுவரை 10,00,000(64சதவிகிதம்) நபர்கள் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 3.5 இலட்சம் நபர்கள்(22.5 சதவிகிதம்) இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதாவது ஒரு லட்சம் நபர்களில் 60,000 நபர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற 10ம் தேதி 1052 முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 1.10 இலட்சம் தடுப்பூசி வரப்பெற்றுள்ளது. இந்த முகாம் மூலம் 1 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 12.09.2021, 19.09.2021, 26.09.2021 மற்றும் 03.10.2021 ஆகிய தினங்களில் நடைபெற்ற நான்கு மாபெரும் தடுப்பூசி முகாம்களின் மூலம் மொத்தம் 2,11,108 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இந்த மாவட்டத்தில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 80 சதவிகிதமும், விருதுநகர், திருச்சுழியில் 77 சதவிகிதமும், ராஜபாளையத்தில் 57 சதவிகிதமும், சிவகாசியில் 55 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் மாவட்டத்தில் 75 சதவிகிதம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட நோய் எதிர்ப்புசக்தி திறன் ஆய்வில் மாநில அளவில் முதலாவதாக விருதுநகர் மாவட்டம் 88 சதவிகிதம் நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி திறன் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. மாவட்டத்தில் இதுவரை சுமார் 45,000 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் அதிகபடியான மக்கள்
தடுப்பூசி செலுத்தி கொண்டதால் பொதுமக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி திறன் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. எனவே, தகுதி வாய்ந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக தங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையத்திலேயே வருகிற 10.10.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.


ஆகையால் இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் அனைவரும் தவறாமல் வருகின்ற 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை நடைபெறுகின்ற ஐந்தாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு, கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரானா இல்லாத விருதுநகர் மாவட்டத்தையும் தமிழகத்தையும் உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, அவர்கள் கேட்டுகொண்டார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777
|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed