October 27, 2021

அத்திப்பட்டு ஊராட்சியில் மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது…

1 min read
Spread the love

வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் துவங்க கூடிய சூழல் உள்ளதால், தமிழக முதல்வர் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படக்கூடிய புயல் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதன் பெயரில்,

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படக் கூடிய பகுதிகளை கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் விதமாக சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு அப் பகுதிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்தார்.

அதன்படி , மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியான அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது அப்பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மழை நீர் வெளியேறும் பகுதிகளை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அனைத்தும் சிறிய அளவில் மழைநீரில் வெளியேற கூடிய கல்வெட்டுகள் அமைத்து உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. என ஊராட்சி மன்றத்தலைவர் சுகந்தி வடிவேலு கோரிக்கை வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து உடனிருந்து வருவாய் துறை அதிகாரிகளிடம் அப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் மழை நீர் வேகமாக வெளியேற விடாமல் இருக்கக்கூடிய தடைகளை அகற்றுவது மற்றும் கால்வாய்களை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட்டது. அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு மற்றும் துணை தலைவர் கதிர்வேல், வார்டு உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து செய்தனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed