October 27, 2021

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மூலம், 2021-22 ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு….

1 min read
Spread the love

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் 19-08-2021 அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 395 இடங்கள் கொண்ட பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 7583 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு மூன்று கல்லூரிகளிலும்,
பி.டெக். பட்டப்படிப்பு நான்கு கல்லூரிகளிலும்,
இளநிலை வணிக மேலாண்மை படிப்பு ஒரு கல்லூரியிலும் மற்றும் இளநிலை தொழில்நுட்பவியல் நான்கு கல்லூரியிலும் நடைபெற்று வருகின்றன.

இந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை 11-10-2021 அன்று பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.கோ.சுகுமார் ,அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டார் . திருவண்ணாமலையைச் சார்ந்த மாணவி சைனி பிரதாப் 198.00 (Cut off) மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், இராமநாதபுரத்தைச் சார்ந்த மாணவி.மா.இந்துஜா, இரண்டாம் இடத்தையும் மற்றும் திருச்சியைச் சார்ந்த மாணவன் இர.கிரிஜெயந்தன், மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். குறிப்பாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இப்பட்டப்படிப்புகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள்
அதிகளவில் இருந்தன.

இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு ஒரு இடத்திற்கு 40 மாணவர்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஒரு இடத்திற்கு 11 மாணவர்களும் விண்ணப்பித்து உள்ளனர்.
ஐந்து சிறப்பு பிரிவினர்களுக்கான விளையாட்டு வீரர், முன்னாள் இராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள்,மீனவ குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் நேரடி கலந்தாய்வு 21-10-2021 அன்று தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் வைத்து நடைபெறும். மேலும், பொது கலந்தாய்வானது இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. முதல் கட்ட இணையதள கலந்தாய்வானது 22-10-2021 முதல் 25-10-2021 வரை நடைபெறும் என்றும் கலந்தாய்வில் அனுமதி பெற்ற மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளது. என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.கோ.சுகுமார், அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் – ந
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed