October 27, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 222 வது நினைவு நாளை கொண்டாட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது…

1 min read
Spread the love

பாஞ்சாலங்குறிச்சியின் அரணாக இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டதால், அவரை வெள்ளையர்கள் தூக்கிலிட்டனர் அவருடைய 222 வது நினைவு தினம் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி ஆகும்.

நாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி கயத்தாறு ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் யாரும் இரண்டு சக்கர வாகனங்களில் கார் மற்றும் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் அவருடைய நினைவு மண்டபங்கள் மற்றும் மற்ற இடங்களில் வழிபாடுகள் நிகழ்ச்சிகள் நடத்தவும், பால் குடங்கள் எடுக்கவும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக செல்லவும் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாதிரீதியாக சட்டைகள் அணிவது கோஷங்கள் எழுப்புவது கூடாது எனவும் மற்றும் சாலை ஓரங்களில் டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செயல்படுபவர்கள் மீது கடினமான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் மூலம் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed