October 27, 2021

பழவேற்காட்டில் இளம் சிறார்கள் வாகனத்தை அஜாக்கறதையாகவும், அதிவேகமாகவும் இயக்குவதால் அடிக்கடி விபத்து…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இளம் சிறார்கள் இருசக்கர வாகனங்களை அஜாக்கறதையாகவும், அதிவேகமாகவும் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதால் பேருந்து ஓட்டுனர்களுக்கும் பயணிகளுக்கும் இடைஞ்சல் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படும் சூழல் உள்ளது.

இதனை காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், எனவே காலை பள்ளி நேரமான 8 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை பள்ளி விடும் நேரமான 3 மணியில் இருந்து 4 மணி வரையிலும் பழவேற்காடு பேருந்து நிலையம் பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இந்த நேரங்களில் மது போதை மற்றும் கஞ்சா போதையோடு இளைஞர்களும் பள்ளி மாணவர்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர். என்ற குற்றசாட்டையும் கூறி வருகின்றனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed