October 27, 2021

பொன்னேரி அருகே மெதூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பனை விதைகளை நடவு செய்தார்…

1 min read
Spread the love

கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற நிர்வாகங்களின் வாயிலாக, மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின் சார்பில், மக்களிடையே பனை தொழில் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும், பனை விதைகளை நடவு செய்தும் வருகின்றனர் .

அதனடிப்படையில் இன்று மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய மெதூர், ஆவூர், திருப்பாலைவனம், அரசூர் போன்ற கிராமங்களில் பனை விதைகளை நடவு செய்யும் விதமாக , மக்கள் நலப்பணி இயக்கத்தின் வாயிலாக மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் அவர்கள் தனது சொந்த செலவில் 12,000 பனைவிதைகளை வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மெதூர் ஊராட்சியில் இன்று துவக்கி வைத்தார்.

மேலும், மெதூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் துணை தலைவர் சசிக்குமார், ஊராட்சி செயலாளர் தரணி, மற்றும் அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஊராட்சி செயலாளர் ஆனந்தன் , திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாளர் சௌந்தர் ஆகியோரிடம் பனைவிதைகளை வழங்கினார்.

அப்போது மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின் தலைவர் பாலகிருஷ்ணன் இலுப்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பிரகாஷ், வில்சன், மெதூர் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – சுந்தர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed