October 27, 2021

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த மாணவி, கண்டபேருண்டாசனத்தில் தொடர்ந்து, 15 நிமிடங்கள் நின்று, புதிய உலக சாதனை படைத்தார்…

1 min read
Spread the love

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த மனோகரன் – மஞ்சுளா தம்பதியர் மகள் ம.மோகன விஜய ராகவி, (16) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.

கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கடந்த ஐந்து ஆண்டு காலமாக யோகாசன பயிற்சி பெற்று வருகிறார். மிகவும் கடினமான கண்டபேருண்டாசனத்தில், தொடர்ந்து, 15 நிமிடங்கள் நின்று புதிய உலக சாதனை படைத்தார். அதன் மூலம், ‛இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ மற்றும் ‛ஆவ்சம் உலக சாதனை’ புத்தகத்தில் இடம் பிடித்தார்.

யோகாவில் உலக சாதனை படைத்த மாணவி, அவரை பயிற்றுவித்த யோகா பயிற்சியாளர் எஸ்.சந்தியா ஆகியோரை சக மாணவர்களும், கும்மிடிப்பூண்டி பகுதி மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

செய்தியார் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed