December 8, 2021

கல்லிடைக்குறிச்சி அருகே, தனது மனைவியுடன் சேர்ந்து வாழவிடாத தாயை, தந்தையுடன் சேர்ந்து கொலை செய்த மகன்…

1 min read
Spread the love

கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சங்கரம்மாள்(46), என்பவரை அவரது மகன் தளவாய்சாமி (25), மற்றும் அவரது கணவர் முருகன் என்ற கிட்டு(47) இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு ஜமீன் சிங்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அன்னை மரியாள், அவர்களிடம் நடந்ததை கூறி சரணடைந்துள்ளனர். அப்போது இருவரும் கூறுகையில், இறந்து போன சங்கரம்மாள் அவரது அண்ணன் மாரியப்பன் என்பவரின் மகளான பூவிதா என்பவரை 10 மாதத்திற்கு முன் தனது மகன் தளவாய்சாமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணமான கொஞ்ச நாளில் சங்கரம்மாள் மற்றும் அவரது அண்ணன் மாரியப்பன் இருவரும் சேர்ந்து பூவிதாவை தளவாய் சாமியுடன் வாழவிடாமல் பாளை தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க வைத்துள்ளனர். மேலும், தொலைபேசியில் தொடர்பு கொள்ளாத படியும் செய்துள்ளனர். இறந்துபோன சங்கரம்மாள் அவரது அண்ணன் மாரியப்பன் கூறியபடி தான் நடப்பார் இதனால் மகன்,தந்தை இருவரும் சங்கரம்மாளிடம் ஐந்து மாதம் பேசாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் 17.10.2021 இன்று அதிகாலை சங்கரம்மாள் தூங்கிக் கொண்டிருந்த போது தளவாய்சாமி தனது தாயை தலையணையால் அமுக்கியும், துண்டை கழுத்தில் போட்டு இருக்கியும், பின் இருவரும் சேர்ந்து சங்கரம்மாளை கட்டிலில் இருந்து கீழே தள்ளி விட்டதில் மூக்கில் இரத்தக் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்,

தந்தையுடன், மகனும் சேர்ந்து தனது தாயை கொண்ற விவரத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கூறியுள்ளனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, அவர்கள், விசாரணை மேற்கொண்டு தளவாய் சாமியையும், முருகன் என்ற கிட்டுவையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed