December 8, 2021

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சென்னையில் இருந்து சைக்கிளில் சென்று திருவள்ளூர் காவல் நிலையங்களில் ஆய்வு செய்தார்…

1 min read
Spread the love

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று திருவள்ளூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். சென்னையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர், பூந்தமல்லி, வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக 45 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவள்ளூருக்கு வந்து அங்குள்ள உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணியில் இருந்த தீயணைப்பு வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

25 ஆண்டுகளாக தீயணைப்பு வீரர்களாக பணி புரிந்தவர்களை சிறப்பு நிலைய அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் தெரிவித்து பெற்று தந்தமைக்கு திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

பின்னர் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு காவல் துறையினர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து காவலர்களிடம் பேசிய அவர், குறைகளை கேட்டறிந்த பின்னர்.

காவல் நிலையத்தின் உள்ளே இருக்கும் சிறைகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.

அதன்பின், அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் குறைகளை கேட்டறிந்த அவர், காவலர் குடியிருப்பில் காவலர்களின் குடும்பத்தாரையும், அவர்களது குழந்தைகளிடமும் கலந்துரையாடி புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

மேலும் சிலம்பாட்டம் ஆடிய சிறுவனுக்கும் புத்தகத்தை பரிசாக வழங்கி பாராட்டினார். எந்த குறையாக இருந்தாலும் உடனடியாக தம்மை தொடர்பு கொள்ளலாம் எனவும் காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed