December 8, 2021

பொன்னேரியில் உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு, ஹாசினி கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

பொன்னேரி ஹாசினி கண் மருத்துவமனை, சென்னை அண்ணாநகர் ஆராதனா கண் மருத்துவமனை, பொன்னேரி மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை, திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கம் இணைந்து இந்த முகாமை நடத்தின.

இந்த முகாமை சென்னை சிப்காட் துணை ஆட்சியர் செந்தில்நாதன், வட்டாசியர் தமிழ்செல்வன், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், பொன்னேரி சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ், சென்னை அண்ணாநகர் ஆராதனா கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் கல்பனா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இம்முகாமில், கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் கண் பரிசோதனை செய்யபட்டவர்களில் ஏழை எளிய மக்களுக்கு இலவச கண்ணாடியை வழங்கினார். மேலும், ஏராளமானோர் கலந்து கொண்டு முழு கண் பரிசோதனைகளை செய்து கொண்டனர். முகாமில் சலுகை விலையிலும் மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது, மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூர் மக்கள் மேம்பாட்டு இயக்க தலைவர் தனுஷ்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed