November 27, 2021

பொன்னேரி அருகே பூட்டிய வீட்டுக்குள் மீன்வளத்துறை அதிகாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு. மின்கசிவு காரணமாக தீவிபத்தா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் சத்தியநாராயணன் (53) என்பவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவர் பொன்னேரியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இன்று பிற்பகல் இவரது வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்ததில் மீன்வளத்துறை அதிகாரி சத்தியநாராயணன் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

இதனையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டினுள் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு உயிரழந்தாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா என பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed