November 27, 2021

நெல்லையில் போக்குவரத்து நெரிசலில் வரிசையாக நின்ற வாகனங்களை சாலையில் இறங்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்த காவல் துணை ஆணையர்…

1 min read
Spread the love

நெல்லையில் போக்குவரத்து நெரிசலில் வரிசையாக வாகனங்கள் தேங்கி நிற்பதை கண்ட காவல் துணை ஆணையர் அவர்கள் அதிரடியாக சாலையில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த செயல் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது.

நெல்லை மாநகராட்சி முருகன் குறிச்சி பகுதி அருகில் இன்று மாலை மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் அவ்வழியே ரோந்து சென்ற காவல் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் அவர்கள் அதிரடியாக தனது காரில் இருந்து இறங்கி போக்குவரத்தை முழுவதுமாக சீர் செய்யும் முயற்சியில் இறங்கினார்.

துணை ஆணையரின் முயற்சியினால் 5 நிமிடங்களில் அப்பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக சீர் செய்யப்பட்டது. ஒரு வழிப் பாதையில் வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக இருந்த இளைஞர் ஒருவரின் காரை காவல் துணை ஆணையர் தடுத்து நிறுத்தினார். அந்த இளைஞர் மன்னிப்பு கோரியதை அடுத்து அவரை எச்சரித்து அனுப்பினார்.

மிகுந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் சிரமப்படுவதை அறிந்த காவல் துணை ஆணையர் சாலையில் நின்று முழுவதுமாக போக்குவரத்தை சீர் செய்த செயல் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed