November 27, 2021

சேலம் மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அருந்தியர் இன மக்களுக்கு பட்டா கிடைக்காததற்க்கு காரணம் யாருடைய அலட்சியம்…

1 min read
Spread the love

நிலம் தொடர்பாக இரு தரப்பினரிடையே எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண, சேலம் கோட்டாட்சியர் அழைப்பினையேற்று, கிராம மக்கள் பேச்சு வார்த்தைக்கு ஆஜரானார்கள்.
சேலம் மாவட்டம், சேலம் மேற்கு வட்டம், கீரபாப்பம்பாடி கிராமம், குட்டக்காடு அருந்ததியர் மக்கள் 50 பேருக்கு, கடந்த 1984ம் ஆண்டு, சர்வே எண். 84/11ல் உள்ள நிலத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலம் பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரிகள் பட்டா வழங்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், புரட்சி பாரதம் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளர் ஏர்போர்ட் காந்தி தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

அந்த புகாரில் பழைய ஆவணங்களை அதிகாரிகள் காணவில்லை என்று தெரிவிப்பதாகவும், அரசு வழங்கிய நிலத்தில் தனி நபர் ஆக்கிரமிப்புக்கு வருவாய் அலுவலர்களே துணை போவதாகவும் புகார் கூறியிருந்தனர். இந்நிலையில், இதுகுறித்து விசாரணை செய்த சேலம் வருவாய் கோட்டாட்சியர், கிராம மக்களை பேச்சு வார்த்தைக்கு ஆஜராகும்படி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதனையேற்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தைக்கு ஆஜரானார்கள்.
பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாததால் மீண்டும் பேச்சு வார்த்தை 15 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். 

சேலம் மாவட்டத்தில்
35 ஆண்டுகளுக்கும் மேலாக அருந்தியர் இன மக்களுக்கு பட்டா கிடைக்காத போது அலட்சியமாக இருந்தது, அதிகாரிகளா.. மக்கள் பிரதிநிதிகளா… மக்களா….

செய்தியாளர் – சேலம், தங்கதுரை
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed