December 8, 2021

திருவண்ணாமலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவண்ணாமலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டடத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ், தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏழுமலை, முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் வேட்பாளர் சுரேஷ் கலந்து கொண்டார். மாநில பொதுச்செயலாளர் வேட்பாளர் சுரேஷ் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

தேர்தல் பற்றியும் வாக்களிப்பது பற்றியும் சங்க உறுப்பினர்களுக்கு விரிவாக எடுத்து கூறினார். மேலும் இக் கூட்டத்தில் மாநில தலைவர் வேட்பாளர்கள் நாகப்பட்டினம் ராஜேந்திரன், செங்கல்பட்டு ஜானகிராமன் மற்றும் மாநில செயலாளர் வேட்பாளர்கள் கடலூர் விசுவநாதன், காஞ்சிபுரம் தியாகராஜன், திருப்பத்தூர் சர்தார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில தேர்தல் நடைபெறும் நாள் இம்மாதம் 31 10 2021 ஆகும். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் திருவண்ணாமலை கணேஷ், மாவட்ட போராட்டக்குழு தலைவர் ரகுராமன், மாவட்ட இணைச்செயலாளர் பிரவீன்குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பத்திரிகை செயலாளர் பன்னீர்செல்வம், கோட்ட செயலாளர் திருவண்ணாமலை பழனி, கோட்ட செயலாளர் செய்யார் கோதண்டராமன், வட்டத் தலைவர் திருவண்ணாமலை உத்தர குமார், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8938476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed