December 8, 2021

நாகப்பட்டினம் மாவட்டம் 30ம் ஆண்டு தொடக்க விழா, கோலாகல கொண்டாட்டம் ஏ.கே.எஸ்.விஜயன், அவர்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது…

1 min read
Spread the love

நாகப்பட்டினம் மாவட்டம் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ரூ.2,86,74,080 கோடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அவர்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம், வனம் தன்னார்வ அமைப்பு சார்பில் 12,000 சதுர அடியில் 1,200 மரக்கன்றுகள் நட்டு பறவைகளுக்கான மியாவாகி முறையிலான அடர்வனம் அமைத்தல், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாகை 30 சிறப்பு புகைப்படக் கண்காட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை , தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை போன்ற துறைகள் சேர்ந்து 20 வகையான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தெரிவித்ததாவது; நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகை 30 ஆம் ஆண்டு விழாவின் தொடக்கமாக காவல்துறை சார்பில் நாகை 30 என்ற பலூனை பறக்கவிட்டும், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசுத்திட்டங்கள் குறித்து விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தும், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாகை 30 சிறப்பு புகைப்படக் கண்காட்சியினையும் ,அனைத்து துறை சார்பில் அரசுத்திட்டங்கள் குறித்து விளம்பர வாகனத்தையும், வனம் தன்னார்வ அமைப்பு சார்பில் பறவைகளுக்கான மியாவாகி முறையில் 12,000 சதுர அடியில் 1200 மரக்கன்றுகள் நட்டு அடர்வனம் அமைக்கும் பணியையும், அனைத்து துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளையும், பார்வைவையிட்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 76,500 க்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் , மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை சார்பில் கொரோனா தொற்றால் ஒற்றை பெற்றோரை இழந்த 18 குழந்தைகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.78,00,000 க்கான காசோலையினையும்,
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருக்குவளை,
வேதாரண்யம் ஆகிய வட்டங்களில் முதியோர் உதவித்தொகை , விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை , முதலமைச்சர் உழவர்பாதுகாப்பு திட்ட முதியோர் பாதுகாப்புத்தொகை ,35 பயனாளிகளுக்கு ரூ.1,45,000 க்கான உதவி தொகையும்,17 நபர்களுக்கு ரூ.1,60,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவையும் , முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகையையும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.4,84,380 இலட்சத்துக்கான வீட்டுமனை பட்டாவையும்,

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.48,700 விலையில்லா தேய்ப்பு பெட்டியையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.2,24,000 மதிப்பில் ஆயில் இன்ஜின், நுண்ணீர் பாசனம தெளிப்பான், மண்புழு உரம் படுக்கை, தார்பாலின் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. சமூக நலத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 46 பயனாளிகளுக்கு ரூ.23,00,000 மதிப்பீட்டிலும், மீன்வளத்துறை சார்பில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி 6 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சத்திற்கான தொலைபேசியினையும், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு தொழில் செய்ய மகளிர் குழுவிற்கு 12 இலட்சம் மதிப்பீட்டில் கடன் தொகையினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.36,01,000 மதிப்பீட்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ் 23 நபர்களுக்கு ரூ.1,14,20,000 க்கான கடன் தொகை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவு என்னவென்றால் எந்தப்பணி செய்தாலும் அந்தப் பணியினை முதன்மையாக மக்களை கருத்தில் கொண்டு மக்களை தேடி செய்ய வேண்டும் என்பதே ஆகும். நாகை 30 என்ற நிகழ்ச்சி தொடங்குவதற்கு காரணமே தனித்துவம் மற்றும் அடையாளம் உருவாக்க வேண்டும் என்பதாகும். நம் மாவட்டம் தொழில்வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. அதனை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும். மீன்வளம் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களை மட்டுமே செய்து மற்ற தொழில்களுக்கு முக்கியத்துவம் தராததால் தொழில்வளம் குறைவாக உள்ளது. மேலும், பொதுமக்கள் கொடுக்கப்படும் மனுக்களில் இலவச வீடு,வீட்டுமனை பட்டா போன்றவைகளும், வேலைவாய்ப்பு போன்றவைகளை பற்றியும் அதிகமாக உள்ளன. வீடு,பட்டா போன்றவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு சி.பி.சி.எல் போன்ற நிறுவனங்கள் நம் மாவட்டத்திற்கு வந்தால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், இது போன்ற பெரிய முன்னணி நிறுவனங்கள் வந்தால் இன்னும் 6 அல்லது 10 ஆண்டுகளில் முன்னோடி மாவட்டமாக மாறும் என்பதில் மாற்றமில்லை.

மீன்வளம் மற்றும் தொழில்வளம் இருந்தும் அதனை மதிப்புக்கூட்டும் திறன் இல்லை. துணி உற்பத்தி ஏற்றுமதி முன்னோடியாக உள்ள திருப்பூரைப் போன்று நம் மாவட்டத்திலும் துணி உற்பத்தி மூலம் பெண்களுக்கும் வேலை கிடைக்கும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பாக அமையும். ஆகவே, தொழில் முதலீட்டாளர்கள் நம் மாவட்டத்திற்கு தொழில் நிறுவனங்கள் நடத்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம் வளர்ச்சி குறித்த தொழில் நோக்கு திட்டத்தை வரையறுக்கப்பட்டு வெளிநாடுகளில் தொழில்புரிவதற்கு அவர்களை வரவழைத்து அடுத்த ஆண்டு 2050 விஷன் நடத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மாதந்தோறும் மாவட்ட முன்னேற்றத்திற்கான நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் நம் மாவட்டம் முன்னேறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த நாகை 30 தொடக்க விழாவில் பலத்துறைகள் சேர்ந்து அமைக்கப்பட்டுள்ள 21 வகையான கண்காட்சி அரங்குகள் 18-10-2021 முதல் 22-10-2021 வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ்அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர், மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பே.பெரியசாமி,
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு, மாவட்ட செயலாளர் என்.கெளதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், மக்கள்பிரதிநிதிகள், பயனாளிககள் , பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் – நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed