November 27, 2021

பரமக்குடி அருகே, திருமணமான தனது சொந்த மகளை கழுத்தை நெறித்து கொன்று யாருக்கும் தெரியாமல் எரித்த பெற்றோர்கள்…

1 min read
Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள செவ்வூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள நண்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குழந்தை இல்லாவிட்டாலும் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, கௌசல்யா உடன் பள்ளிப் பருவம் மற்றும் கல்லூரிப் பருவத்தில் நண்பராய் இருந்த போலீஸார் பார்த்திபனை  ராமநாதபுரத்தில் சந்தித்துள்ளார் கௌசல்யா. அவர்கள் இருவரும் பேசி மகிழ்ந்து விட்டு, அப்போது அவரது அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு சென்ற போலீஸார் பார்த்திபன்  தினமும் அவருடன் அலைபேசியில் பேசி வந்துள்ளார்.

இதனைக்கண்ட கௌசல்யாவின் கணவர் கனகராஜ் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களுடைய அலைபேசி உரையாடல் நிற்கவில்லை. இதனால் கனகராஜ்க்கும் கௌசல்யாவுக்கும்  அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது நண்பரான பார்த்திபனிடம்  தான் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் நிம்மதியாக வாழ முடியவில்லை எனவும் கூறி கவலையடைந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட போலீஸ் பார்த்திபன் என்னோடு வந்து விடு சந்தோசமாக வாழலாம் என கூறி ஆசையோடும், அன்போடும் அழைத்துள்ளார். இதனை கேட்ட கெளசல்யா பல நாட்கள் இரவு, பகலாக இதனைப் பற்றியே சிந்தித்து இறுதியாக, நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, மதுரையில் தனது நண்பரான போலீஸ் பார்த்திபனுடன்  வாழ்ந்து வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியுற்ற கணவர் கனகராஜ்
தனது மனைவி காணாமல் போனது குறித்து சத்திரக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்த சத்திரக்குடி போலீஸார்கள் கௌசல்யா சென்ற கார் எண்ணை வைத்து அதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என அறிந்து அவரைச் சத்திரக்குடி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு கனகராஜ் மற்றும் கௌசல்யாவின் குடும்பத்தினரை  வரவழைத்து இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடக்கூடாது என்றும் சிறிது காலம் உன் பெற்றோருடன் சென்று  அவர்களுடன் இருந்து வர அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் கனகராஜ் கோபம் தீர்ந்தவுடன் அவருடன் சமாதானமாகப் பேசி மீண்டும் சேர்ந்து வாழலாம் எனவும் கூறியுள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட கௌசல்யா தனது பெற்றோருடன் நண்டுப்பட்டியில்  கடந்த 4 மாத காலமாக வசித்து வந்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து தனது கள்ளக் காதலனான போலீஸாருடன் அவர் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென கௌசல்யா எலி மருந்தை சாப்பிட்டு மயக்க நிலையில் வீட்டில் இருந்துள்ளார். வயல்வெளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்கள் மயக்கநிலையில் இருந்த கௌசல்யாவை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இரண்டு நாட்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கௌசல்யாவை அவரது பெற்றோர் மருத்துவமனையில் தகவல் தெரிவிக்காமலேயே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அழைத்து வந்த மறுநாள் மீண்டும் கௌசல்யா எலி மருந்தை சாப்பிட்டு இறந்ததாகவும் இதனை யாரிடமும் தெரிவிக்காமல் இவர்களே கௌசல்யாவை ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கால்வாய் பகுதியில் உடலை எரித்துள்ளனர்.

இது சம்மந்தமாக தகவலறிந்த அன்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஏன்? எங்களுக்கு தகவல் சொல்லாமல் இப்படி செய்தீர்கள் எனக்கேட்டு போலீஸ் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து நண்டுப்பட்டி கிராமத்திற்கு சென்ற போலீஸ் துறையினர் அங்குள்ள கிராமத்தினரிடம் விசாரணை செய்தனர். பின்பு கௌசல்யாவின் உடல் எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீஸார் அங்கிருந்த சாம்பல் மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரிப்பதற்காக கௌசல்யாவின் பெற்றோரையும் போலீஸ் துறையினர் அழைத்துச் சென்றனர் அங்கு போலீஸார் விசாரித்ததில் தொடர்ந்து எங்களது பேச்சைக் கேட்காமல் குடும்பத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் அவள் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்ததால் ஆத்திரத்தில் நானும் எனது கணவரும் மூச்சை பிடித்து அமுக்கி கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து தாய் அமிர்தவல்லி, தந்தை தென்னரசு ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர் . பெற்ற மகளையே பெற்றோர்கள் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – பரமகுடி, ஜெயகுமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed