November 27, 2021

நாகப்பட்டினம் மாவட்டத்தில், “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை பயண வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவங்கி வைத்தார்….

1 min read
Spread the love

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவின்படி இல்லம் தேடிக் கல்வி” என்ற திட்டத்தை செயல்படுத்தப்படுவதை முன்னிட்டு நம் மாவட்டத்திலும் இத்திட்டத்தின் விழிப்புணர்வுக்காக 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு வாகனங்கள் வீதம், 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் மூன்று விழிப்புணர்வு கலை பயண வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை கற்பதைக் கற்கண்டாக்க இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு கலைப்பயண வாகனம் கொரோனா பெருந்தொற்று பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைச் சரிசெய்தல், பள்ளி நேரத்தைத் தவிர , மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல், மாணவர்கள் பள்ளி சூழலின் கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை ” இல்லம் தேடிக் கல்வி” திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.

மேலும் இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் அடுத்த வகுப்புக்கு செல்லும் போது அவர்கள் அதற்கு முழு தகுதி படைத்தவர்களாக இருப்பார்கள். இத்திட்டத்தின் செயலாக்கமானது இக்கல்வியாண்டில் 6 மாத காலத்திற்கு தினசரி குறைந்தபட்சம் 1 முதல் 1:30 மணி நேரம் (தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) தன்னார்வலர்களின் மூலம் மாணவர்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டமானது அரசு திட்டமாக மட்டும் இல்லாமல் பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் , ஆசிரியப் பெருமக்கள், பலத்துறையைச் சார்ந்த பிரபலங்கள் போன்ற அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கமாக திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக சேவையாற்ற விருப்பமுடைய தன்னார்வலர்கள் 1முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதைப் போலவே 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக கணினி மற்றும் Smartphone மூலமாகவும், அரசு உயர் மற்றும் மேனிலை பள்ளிகளில் உள்ள Hi-Tech Labs மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.அ.அருண் தம்புராஜ் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.மதிவாணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.தனபால்,
உதவித் திட்ட அலுவலர் பீட்டர் பிரான்ஸிஸ், மாவட்ட கல்வி அலுவலர் எம்.உதயகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பி.சாம்பசிவம் , மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed