December 8, 2021

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக்கணக்குக் குழுத்தலைவர் , சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலர், சட்டமன்ற பேரவை துணை செயலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

1 min read
Spread the love

நேற்று வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் , தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை, சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு உறுப்பினர்கள் டாக்டர்.சரஸ்வதி, பூண்டி கே.கலைவாணன் , சிந்தனை செல்வன், சி.சுதர்சனம் , தி.வேல்முருகன் முனைவர் எச்.எம்.ஜவாஹிருல்லாகே.மாரிமுத்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக்கணக்குக் குழுத்தலைவர் செல்வபெருந்தகை அவர்கள் தெரிவித்ததாவது; இந்த கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் 2011முதல் 2020 வரையிலான ஆண்டுகளுக்கான அறிக்கைகளில் (உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் பிரிவு தணிக்கை, பொது மற்றும் சமூகப்பிரிவு தணிக்கை, பொருளாதார பிரிவு தணிக்கை , மாநில நிதி நிலை உள்ளிட்ட தணிக்கை பத்திகள்) குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ,தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை , பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து பொது தணிக்கைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் ஆய்வு செய்யபடுகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், அரசு கட்டிடங்களை ஆய்வு செய்து வருகிறோம். அங்கன்வாடிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட புதிய கட்டிடங்கள் குறுகிய காலங்களில் செயல்பாட்டிற்கு வரும். அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை சரிவர பயன்படுத்தி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு உரிய நேரத்தில் கொண்டுவரவும் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது தணிக்கை குழுவின் அதனடிப்படையில்

திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆணை வடபாதி பகுதியில் அங்கன்வாடி மையத்தின் பணிகள் குறித்தும், எண்கன் பகுதிக்குட்பட்ட மகளிர் சுகாதார வளாகம், குடவாசல் பகுதியிலுள்ள அரசு கல்லூரியின் கட்டுமான தரத்தினையும், கொரடாச்சேரி பகுதியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான வகுப்பறைகள், கழிவறைகள், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரம் குறித்தும் , கொரடாச்சேரி பகுதியிலுள்ள கால்நடை நோய்கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், நெடும்பலம் அரசு விதைப்பண்ணையினையும் , திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரயினையும்,
கிடாரங்கொண்டான் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற பேரவை துணை செயலர்கள், பி.தேன்மொழி, ப.ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், அவர்கள், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆ.தியாகராஜன், பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) மோகனசுந்தரம் , உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed