December 8, 2021

சோழவந்தான் காவல்நிலையத்தில் ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…

1 min read
Spread the love

மதுரை மாவட்டம், சோழவந்தான் காவல் நிலையம் மற்றும் காடுபட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தர் ஆலோசனையின் பேரில், சோழவந்தான் காவல் நிலைய வளாகத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்
பெக்டர்கள் ராஜேந்திரன், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை காவலர் உக்கிரமாபாண்டி வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்
பெக்டர்கள் ரபீக் முகமது, முத்துப்பாண்டி, முத்தையா ஆகியோர் தேவர் ஜெயந்தி விழாவில், அரசு விதிமுறைகள் குறித்து எடுத்து கூறி பேசினார்கள். தலைமைக் காவலர் சண்முகராஜன் நன்றி கூறினார்.

செய்தியாளர் – வி காளமேகம் மதுரை நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed