December 8, 2021

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் அதிக இடங்களில் வெற்றி பெற்றது விஜயையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது …

1 min read
Spread the love

நடிகர் விஜய் தமிழ் திரைப்பட துறையில் நுழைந்ததில் இருந்து தன்னை படிப்படியாக தன்னுடைய திறமைகளால் உயர்த்தி கொண்டு தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எல்லாம் இருக்க கூடிய இளைஞர்களை தனது நடிப்பால் ஈர்த்ததால் அவர் பெரிய அளவில் ரசிகர் மன்ற பட்டாளங்களை வைத்திருக்கிறார்.

அவர்கள் மூலம் தமிழக மக்களுக்கு நலதிட்ட உதவிகள் செய்யவேண்டி, தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினார். பின்னர் 2011 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்ததுடன் அவருடைய தந்தை பல இடங்களில் பிரச்சாரமும் செய்தார். ஆனாலும் அதில் இருந்து சில காலத்தில் விஜய் நடித்த படங்களுக்கு மட்டுமில்லாமல் விஜயுடைய பிறந்தநாள் கொண்டாங்களுக்கு கூட அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் பல முட்டுக்கட்டைகளை போட்டார்.

அதிலிருந்து அரசியல் சம்மந்தப்பட்ட முடிவுகளில் அமைதிகாத்து வந்தார் விஜய். ஆனால் அவருடைய தந்தையின் அரசியல் தாகம் தீராததால் விஜயை வைத்து அரசியல் செய்ய பல விதங்களில் முயற்சி செய்து, அரசியல் கட்சியும் தொடங்க பல முறை முடிவு செய்த நிலையில் அவருக்கும் அவருடைய தந்தைக்கும் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்பட்ட பல நிகழ்வுகள் தலைப்பு செய்திகளாயின , ஆனால் பல படங்களில் அரசியல் விமர்சனங்களை செய்து மத்திய அரசின் நேரடி எதிர்ப்பையும் பெற்று வந்த நிலையில் மாநில அரசியல் குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்காமல் அமைதி காத்துவந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் விடுபட்டுப்போன மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடலாம் என திடீரென தடாலடியாக அறிவித்தார். இதில் மகிழ்ச்சி அடைந்து போன அவருடைய ரசிகர்கள் 161 இடங்களில் போட்டியிட்டு 129 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என அடங்குவார்கள் அதில் மாவட்ட வாரியாக கள்ளக்குறிச்சி – 35 விழுப்புரம் – 33 காஞ்சிபுரம் – 21 செங்கல்பட்டு – 12 ராணிப்பேட்டை – 10 திருப்புத்தூர் – 8 வேலூர் – 6 திருநெல்வேலி – 2 தென்காசி – 2

இந்த வெற்றிகளுக்காக விஜய் எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை, ஆதரவு யாரிடமும் கேட்கவில்லை ஆனால் போட்டியிட்ட இடங்களில் பெருவாரியாக வெற்றி பெற்றதால் பெரிய கட்சிகள் இந்த வெற்றியை உன்னிப்பாக கண்காணிக்கின்றன, சீமான், கமலஹாசன் போன்றவர்கள் சிறிது கலக்கத்துடன் அதிர்ந்து போய் உள்ளனர்.


நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed