November 27, 2021

பழவேற்காடு கடல் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து, தங்கள் வலைகளை சேதப்படுத்தி, மீன்பிடிக்கும் வெளி மாவட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

1 min read
Spread the love

பழவேற்காடு பகுதியில் 40 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அதில், குறிப்பிட்ட சில கிராம மக்கள் பழவேற்காடு கடல் பகுதியில் சிறிய வகை மோட்டார் படகு மூலம் அரசு வகுத்துக் கொடுத்துள்ள எல்லைக்குள் மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், தினங்களுக்கு முன் ஆழ்கடலில் மீன் பிடிக்க வேண்டிய அதிக அளவு திறன் கொண்ட விசைப்படகுகள் காரைகால், நாகைபட்டினம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடற்கரை ஓரமாக வந்து, மீன்பிடித்து பழவேற்காடு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி சென்றுள்ளனர். அதனால் பழவேற்காடு பகுதி மீனவர்கள் வெளிமாவட்ட மீனவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது வெளிமாவட்ட மீனவர்கள் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பெட்ரோல் குண்டு மற்றும் ரப்பர் பந்துகள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டியும், தாக்கியும் தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து பழவேற்காடு மீன் விற்பனை கூட்டுறவு ஒன்றியம் சார்பில் அதன் நிர்வாகிகள் நாராயணன் மற்றும் சந்திரசேகர் தலைமையில் மீனவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். அதில், பழவேற்காடு பகுதி கடல் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடலில் இருந்து அரசு நிர்ணயித்த எல்லைக்குள் மீன் பிடித்து வாழ்ந்து வருகிறோம். ஆனால் அந்தப் பகுதிகளில் ஆழ்கடலில் மீன் பிடிக்க வேண்டிய அதிநவீன வலைகளையும் , அதிக திறனையும் கொண்ட மோட்டார் விசை படகுகள் (450 HP) பழவேற்காடு உள்ளூர் மீனவர்கள் மீன் பிடிக்க கூடிய பகுதியில் வந்து மீன்பிடிப்பது மட்டுமில்லாமல் எங்கள் பகுதி மீனவர்களுடைய வலைகளையும் அறுத்து சேதப்படுத்தி செல்கின்றனர்.

இந்த சம்பவம் இன்று நேற்றல்ல கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருகிறது இதனால் எங்கள் பகுதி மீனவர்களுடைய 1கோடி மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்து உள்ளன. அதுமட்டும் இல்லாமல் அவர்களை பிடிக்க முயன்ற எங்கள் பகுதி மீனவர்களை பட்டகத்தி மற்றும் பெட்ரோல் குண்டுகள் போன்ற ஆயுதங்களை காட்டியும், ரப்பர் குண்டுகள் மற்றும் கற்களை மீனவர்கள் மீது வீசியும் தாக்கியுள்ளனர்.

ஆகவே, பழவேற்காடு கடல் பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் இது போன்ற அத்துமீறி அவர்களுடைய எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடிப்பதிலும் மீன் பிடிக்கும் போது அந்த பொருட்களை செய்யப்படுவதாலும் பழவேற்காடு பகுதியில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும் பழவேற்காடு கடல் பகுதியில் பெரிய அளவில் மோதல் உருவாக்கக்கூடிய நிலவரத்தையும் வெளிமாவட்ட மீனவர்கள் உருவாக்குகின்றனர். ஆகவே, அவர்கள் மீது உடனடியாக தாங்கள் நடவடிக்கை எடுத்து எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு கேட்டுகொள்கிறோம், என கோரியிருந்தனர்.

G. பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed