December 8, 2021

புழல் ஒன்றியம் விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் தரிசு நிலங்களை சீரமைத்து மரக்கன்றுகள், பனைவிதைகள் நடும் நிகழ்வை ஊராட்சி தலைவர் பாரதி சரவணன் துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

விளாங்காடு ஊராட்சி பகுதிகளில் தரிசாக இருக்க கூடிய நிலங்களை சீரமைத்து அதில் ஊராட்சிக்கும் ஊராட்சி மக்களுக்கும் பலன் அளிக்கக்கூடிய மர வகைகளையும் பணிவிதைகளையும் விதைக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவருடைய ஆலோசனையின் பேரிலும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துற, ஊரக வளர்ச்சித் துறையினுடைய ஆலோசனையின் பேரில், விளாங்காடு பக்கத்தில் அடுத்த பத்தாண்டுகள் கழித்து தொடர்ந்து நிரந்தர வருவாய் வரக்கூடிய மர வகைகளை வளர்க்கும் விதமாக,

விளாங்காடுபாக்கம் முதல்நிலை ஊராட்சியில் முதல் கட்டமாக, 500 மரக்கன்றுகள், 6,000 பனை விதைகள் நடுவு செய்யும் நிகழ்வின் துவக்க விழா ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விளாங்காடுபாக்கம் தி.மு.க ஊராட்சி செயலாளர் பெ.சரவணன், ஊராட்சி துணைத்தலைவர் கலாவதி நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அந் நிகழ்வில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ந.ஆனந்தி நாகராஜன், ஆர்.தர்மி ரவி, ஏ.எல். மாரி, எஸ்.அருணா தேவி சீனிவாசன், என்.மாரியம்மாள் நரசிம்மன், கே.சத்தியசீலன், எம்.நிலவழகி இனியன், எஸ்.ரதி சீனிவாசன், ஊராட்சி செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed