November 27, 2021

ராஜபாளையம் எம்.எல்.ஏ, தீபாவளியை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி, “எல்லையில் ராணுவ வீரர்கள் பாதுகாக்கின்றனர் நகர மற்றும் கிராம பகுதிகளில் துய்மை பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் நம்மை பாதுகாத்து வருகின்றனர்” என புகழாரம்…

1 min read
Spread the love

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபடக் கூடிய துப்புரவு பணியாளர்களுக்கு இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தனது சம்பளத்தில் இருந்து 1000 தூய்மை காவலர்களுக்கு 7லட்சம் மதிப்புள்ள புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி கவுரவித்தார் .

அதைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர், “ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாக்கின்றனர் . ஆனால் தூய்மை பணியாளர்களாக தூய்மை பணியில் ஈடுபடக் கூடிய நீங்கள் நகர மற்றும் கிராம பகுதிகளில் டெங்கு மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி மக்களை பாதுகாத்து வருகிறீர்கள்” என கூறி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார். தீபாவளி முடிந்தவுடன் உங்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார் .

இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் நகர செயலாளர் ராமமூர்த்தி மற்றும் மணிகண்டன் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துய்மை பணியில் ஈடுபடக் கூடிய தூய்மை காவலர்கள் புத்தாடை இனிப்பு வழங்கி வழங்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..

செய்தியாளர் – வி காளமேகம்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed