November 27, 2021

செங்குன்றம் சில்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது…

1 min read
Spread the love

செங்குன்றம் அடுத்த எம்.ஏ.நகர் சில்ரன்ஸ் பேரடைஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் டேவிட் மேனியல்ராஜ் தற்காப்புக்கலை பயிற்சி மையம் சார்பில், சிலம்பாட்ட போட்டி சிலம்பாட்டம் பயிற்சி மையத்தின் நிறுவனர் பார்த்தீபன், தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. சில்ரன்ஸ் பேரடைஸ் பள்ளியின் தாளாளர் ராஜன் போட்டியை துவக்கி வைத்தனர்.

இப்போட்டியில் சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், சிலம்பாட்ட கழக செயலாளர் ஹரிதாஸ், வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம், சிலம்பாட்ட கொம்பு போன்றவற்றை வழங்கி வாழ்த்தினர்.

இதில், போட்டி நடுவர்கள் பகவதிசந்திரசேகரன், ரதிராஜா நிர்வாகிகள் தமிழ்செல்வன், கலைச்செல்வன், பூவரசன், கோகுல், தணிகைவேல், சந்தோஷ், சுதாகர், மோகன்குமார், வேனில், யோகேஸ்வரி, நர்மதா, மைதிலி, தீப்ஷிகா, சோனா, சுவாதி, சண்முகவள்ளி  உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள்  கலந்துகொண்டனர்.
முடிவில் பொருளாளர் கோபிநாத் அனைவருக்கும் நன்றி கூறினார். 

செய்தியார் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed