November 27, 2021

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் உலக பக்கவாத நாள் கருத்தரங்கில், பக்கவாததில் பாதிக்கபட்டவர்களை 6 மணி நேரத்தில் முடியும் என விளக்கம் …

1 min read
Spread the love

உலக பக்கவாத நாள் (30.10.21) மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. பக்கவாதம் ஏற்பட்ட 6 மணி நேரத்திற்குள் சிகிட்சை எடுத்தால் உடனடியாக சரி செய்யலாம். (Code Stroke ) அதற்கான புதிய மருத்துவ சேவை மையம் துவங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வேலம்மாள் மருத்துவமனையில் உலக பக்கவாத தினம் கொண்டாடப்பட்டது.
இதில் வேலம்மாள் மருத்துவ குழு தலைவர் முத்துராமலிங்கம் அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.

வேலம்மாள் மருத்துவ நரம்பியல் நிபுணர் கணேஸ் பாண்டியன். உதவி பேராசிரியர் கவிதா ஆகியோர். பக்கவாதம் ஏற்படால் அதன் பாதிப்புகளை சரி செய்ய எந்தெந்த மாதிரி சிகிட்சைகள் பெற வேண்டும். பக்கவாதம் ஏற்பட்டவர்களை 80% குணப்படுத்த முடியும் எனவும், அவர்களுக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க வேண்டும். அனைத்து வயதினருக்கும் பக்கவாதம் வரலாம். சர்கரை நோய் , அதிக எடை, குடி பழக்கம், மன அமைதியின்மை. முறையான உடற்பயிற்சி போன்றவற்றை முறையாக கடைபிடிக்காவிட்டால் பக்க வாதம் ஏற்படலாம்.

பக்கவாதம் ஏற்படும் அறிகுறிகள்
பார்வை மங்குதல், முகவாதம் , தோள்பட்டை , பேச்சு வராமல் போதல் போன்றவை நோயின் அறிகுறிகள். பக்கவாதம் வந்த (கோல்டன் டைம்) பொன்னான நேரம் என கருத கூடிய 6 மணிநேரத்தில் பாதிக்கபட்டவர்கள் உடனடி சிகிச்சை பெற்றால் மூளையில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்து விடலாம். என அனைவருக்கும் அறிவுரை வழங்கபட்டது.

செய்தியாளர் – வி காளமேகம் மதுரை
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed