December 8, 2021

மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜாவை கண்டித்து செய்தியாளர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இருந்து வெளிநடப்பு…

1 min read
Spread the love

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் மற்றும் திருவாரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்காக, நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் காத்திருந்த பொழுது, மன்னார்குடி சட்டமன்ற திமுக உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா சபை நாகரிகம் ஏதும் இல்லாமல் செய்தியாளர்கள் அனைவரையும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினார்.

டி.ஆர்.பி.ராஜா சபை நாகரீகம் இல்லாமல் மைக்கில் அவர் அப்படி கூறிய செய்கை செய்தியாளர்கள் இடையே பெரும் மிகுந்த மனவருத்தம் அடைய செய்ததுடன். கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா வை கண்டித்து செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

அப்போது உள்ளூர் திமுக கட்சி பிரமுகர்களும், சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் அவர்களுடைய உதவியாளரும் செய்தியாளர்களிடம் வந்து சமாதானம் செய்தனர். பின்னர் “அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் கூட்ட அரங்கிற்கு வாருங்கள் ” என அழைத்தனர். ஆனால் செய்தியாளர்கள் “அமைச்சரை நாங்கள் கூட்டரங்கில் சந்திக்க விரும்பவில்லை அவர் வெளியில் வரும் போது நாங்கள் பேட்டி எடுத்துக் கொள்கிறோம்” என கூறி கூறிவிட்டனர்.

அதன் பிறகு அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் கட்டிட வாயலில் வந்து மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் எடுத்து இருக்கும் நடவடிக்கைகள் குறித்து பேட்டி அளித்தார். பின்னர் செய்தியாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜனுடைய செய்கை குறித்து கூறியபோது அதற்கு அவர் செய்தியாளர்களை சமாதானம் செய்தார். அப்போது அவருக்குப் பின்னால் நின்றிருந்த சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி.ராஜா செய்தியாளர்களை பார்த்து அதட்டலாக குரல் கொடுத்தார். அப்போது இடைமறித்த அமைச்சர் , டி.ஆர். ராஜாவை அமைதியாக இருக்குமாறு அறிவுரை கூறினார்.

.

பின்னர் , அமைச்சர் பேட்டி கொடுத்து விட்டு கலைந்து செல்லும்போது செய்தியாளர்களை மிரட்டும் வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜா வை அமைச்சர் முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். ராஜாவுடன் வந்தவர்கள் சிலர் செய்தியாளர்களை மிரட்டியுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு திட்டத்தையும் மக்களிடம் நேரடியாக கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அவரே களத்தில் இறங்கி எந்த ஒரு முதல்வரும் செய்யாத அளவிற்கு பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்வதும் வகுப்பறையில் சென்று அமர்ந்து ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவதை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் தமிழக மக்களிடையே பெரிய அளவில் ஆதரவு பெற்று வரக்கூடிய சூழ்நிலையில் இதுபோன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவெளியில் நாகரிகமாக நடந்து கொள்ளாத சில சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed