December 8, 2021

செங்கம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு துறையினர் பாறையில் தவறி விழுந்ததில் பலத்த காயம்

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குப்பநத்தம் அணையை ஒட்டியுள்ள ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் உள்ள நாமக்கார நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வரத்து அதிகம் வருவதால் செங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கும் அதனை கண்டு ரசிப்பதற்காக ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். ‘

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலையைச் சேர்ந்த 9 பேர் இன்று நீர்வீழ்ச்சியை வரும் தண்ணீரை கடந்து மேலே ஏற முயற்சித்தவர்கள் திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் கரையை கடக்க முடியாமல் தத்தளித்தனர் பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டும் அங்குள்ள பொதுமக்கள் கயிறு மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

மேலும் செங்கம் தீயணைப்பு துறையினருக்கு அங்கு வந்த தீயணைப்பு துறையினரும் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ் மற்றும் சண்முகம் என்ற தீயணைப்பு துறையினர் சுமார் 15 அடி உயரமுள்ள பாறையில் இருந்து தவறி விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயமடைந்து செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் – மூர்த்தி நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed