December 8, 2021

எல்லாபுரம் ஒன்றியம் கொடுவள்ளி கிராமத்தில் உதவும் இதயம் கல்வி மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளுர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கொடுவள்ளி கிராமத்தில் உதவும் இதயம் கல்வி மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு விழா அறக்கட்டளையின் தலைவர் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி கிளப் ஆஃப் திருவள்ளூர் பிரைட்டின் தலைவர் ஆர்யா எஸ். சீனிவாசன் மற்றும் பொருளாளர் . அசோகன், நேரு யுவ கேந்திராவின் திருவள்ளூர் மாவட்ட தேர்வுக்குழு உறுப்பினர் செந்தில்குமார்,

காந்திஜி அறக்கட்டளையின் தலைவர் வானரசன், C-5 வெங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் முருகன், திரைப்பட இயக்குனர் சுந்தரேசன், வழக்கறிஞர்கள் T. K. முருகேசன் மற்றும் சசிகுமார், சர்வேஸ்வரா மெடிக்கல்ஸ் உரிமையாளர் .
ஆர்.தர்மமூர்த்தி, பாடியநல்லூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரியதர்ஷினி சரவணன் மற்றும் ராஜேஷ் குமார் சாலமோன் அவர்கள் கலந்துகொண்டு அறக்கட்டளையின் 10ம் ஆண்டு அறக்கட்டளை நாள் விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினர்.

கலை நிகழ்ச்சிகளுடன் கேக் வெட்டி துவங்கப்பட்ட இவ்விழாவில் அறக்கட்டளையின் (Helping HEART) மூலம் நடைபெறும் டாக்டர். அம்பேத்கர் கல்வி நிலையம் இலவச பாடசாலையின் 5 மையங்களில் பயிலும் 120 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பேனா, நோட்டு புத்தகம், மரக்கன்று மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ஊனமுற்றோர் மற்றும் ஏழை இருளர் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

கொரொனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரையும் வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்து மரக்கன்று மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் விழாவின் முடிவில் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் அறக்கட்டளையின் உறுப்பினர் R. பாக்யராஜ் மற்றும் அம்சவேனி, ஐசக் சின்ராசு, மதன், டெல்லி பாபு, கார்த்திக், சந்தோஷ்குமார், தமிழ்செல்வன், மற்றும் புருஷோத்தமன் ஆகியோர்கள் கலந்து உடனிருந்தனர்.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed