December 8, 2021

செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் குறித்த வீண் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம், ஏரி பாதுகாப்பாக உள்ளது, என தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகர், தனுவேல்ராஜ் முத்துக்காத்தன் வேண்டுகோள்…

1 min read
Spread the love

கடந்த சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டி விட்டதாகவும் (மொத்த உயரம் 24அடி) அதனால் ஏரியை திறக்கும் போது சென்னைக்கு வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அதன் உண்மையான நிலவரம் குறித்து,
தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்ட
ஒருங்கிணைப்பாளரும்
தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகருமான தனுவேல்ராஜ் முத்துக்காத்தன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று அமைச்சர் த.மோ. அன்பரசன் அவர்கள் ஏரியை பார்வை யிட்டார். அவருடன் நானும் நமது நீர்மேலாண்மை குழுவும் நேரில் சென்று ஆய்வு செய்தோம். அதன் முடிவுகளை பார்க்கும் முன்னர் ஒரு அணை அல்லது ஏரியின் நீர் இருப்பை கணக்கிடும் சரியான முறையை பார்ப்போம்.

எப்போதும் நீர் அளவினை நீர் உயரத்தை வைத்து கணக்கிட கூடாது. நீரின் கொள்ளளவு எவ்வளவு என்பதை கொண்டே கணக்கிட வேண்டும். உதாரணமாக நாம் செம்பரம்பாக்கம் ஏரியை எடுத்துக்கொண்டால் அதன் மொத்த கொள்ளளவு 3645mcft அதாவது 10321.45கோடி லிட்டர் தண்ணீர் ஆகும். தற்போதைய நீர் இருப்பு 2996mcft அதாவது 8483.47கோடி லிட்டர் தண்ணீர் இருப்பு உள்ளது. அணை தற்போது வரை 82சதவிகிதம் மட்டுமே நிறைந்துள்ளது. நவம்பர் மாதம் 80 முதல் 90சதவிகித நீரினை கொள்ளளவு வைத்து கொள்ள அனுமதி உள்ளது. அதுவே டிசம்பர் மாத இறுதி நேரத்தில் மழை அளவு குறைய கூடும் என்பதால் அதன் பிறகு கோடை கால பயன்பாட்டிற்க்காக அணையில் முழு கொள்ளளவு நீரினை தேக்கி வைத்துகொள்வர்.

தற்போது அணை 82சதவிகிதம் நிறைந்து உள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவில் முதல் கட்டமாக 500 கன அடி என ஆரம்பித்து தற்போது மழையின் அளவை பொறுத்து தற்போது 2,000கன அடி நீரை திறந்து உள்ளனர். மழை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் வெளியேற்றும் நீரின் அளவு அதிகபட்சம் 3000கன அடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அடையாரின் நீர் கடத்தும் திறன் 30,000கன அடி ஆகும். எனவே இந்த 2,000 – 3,000கன அடி நீர் என்பது ஆற்றில் சொற்ப அளவு நீர் தான். 2015-ன் போது ஒரே நேரத்தில் ஆற்றில் 80,000கன அடி நீர் (நீர் திறப்பு 25000கன அடி + கன மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 55,000கன அடி) வெளியேற்றப்பட்டதால் தான் மிகப் பெரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

எனவே அது போல பெரிய வெள்ளம் ஏற்படும் சாத்தியமே தற்போது எழவில்லை.
எனவே யாரும் வீணாக பயப்பட வேண்டாம் மற்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
நாம் அனைவரும் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் மாவட்ட மக்கள்) பாதுகாப்பாகவே இருக்கிறோம். என்பதனை இந்த அறிக்கை மூலம் தெரிவித்து கொள்கிறேன். என தனவேல் முத்துகாத்தன் தெரிவித்துள்ளார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed