November 27, 2021

இராஜபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து, கொலை மிரட்டல் விட்ட 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு …

1 min read
Spread the love

ராஜபாளையம் அருகே உள்ள சம்மந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மீரான் மைதீன், இவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இவர் ராஜபாளையம் காவல் நிலையத்தில் தன்னுடைய மகளுக்கும் பேரனுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக மூன்று பேர் பணம் பெற்று கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகர் அவர்கள் உத்தரவின் பேரில் இராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன் மேற்பார்வையில் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான உதவி ஆய்வாளர் ரமேஷ் , போன்ற போலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் இரண்டு பேரை போலிசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில், ஒருவர்
ஜானகிராமன் என்பவர் என்பதும் அவர் திருவள்ளுவர் மாவட்டம் வேப்பம்பட்டு என்கிற ஊரில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். அதேபோல் ராஜபாளையம் பகுதியில் திருமண தகவல் மையம் நடத்தி வரும் வீரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் மதுரையை சேர்ந்த
மணிகண்டனுக்கு பெண் பார்த்து கொடுப்பதற்க்கு மணிகண்டனை தொடர்பு கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் தான் மதுரை கலெக்டர் ஆபீசில் எம்ப்ளாய்மெண்ட் செக்ஸனில் வேலை பார்த்து வருவதாகவும், யாருக்காவது அரசுவேலை வேண்டுமென்றால் தான் வாங்கி கொடுப்பதாகவும் கூறி ஆசை வார்த்தை காட்டி உள்ளார்.

ஜானகிராமனும் , அதை நிருபிக்கும் வகையில், மணிகண்டன் பல நபர்களுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக நம்ப வைத்துள்ளனர். அதனை நம்பி மீரான் மைதீன் சுமார் ரூபாய் 2, லட்சத்து 68, ஆயிரத்தை இவர்கள் இருவரும் அடையாளம் காட்டிய ராஜாராமன் என்பவருடைய வங்கி கணக்கின் வாயிலாகவும், கூகுள் பே வாயிலாகவும் அனுப்பி வைத்துள்ளார். இது சம்பந்தமாக மீரான் மைதீன் ராஜாராம் ஜானகிராமன், மணிகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் மூன்று பேரிடமும் தனது பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டபோது உன்னை கூலிப்படை வைத்து கொன்று விடுவதாக கொலை மிரட்டல் செய்துள்ளனர். அதன் பிறகு தான், மேற்படி நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார் மீரான். போலீஸாரின் தீவிர விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது.

மீரானிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த நபர்கள் மணிகண்டன், ராஜாராம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தலைமறைவான மற்றொரு குற்றவாளியான ஜானகிராமனை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed