November 27, 2021

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ராசேந்திர சோழீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹார விழா நடந்தது…

1 min read
Spread the love

அறந்தாங்கியில் கோட்டை பகுதியில் ராசேந்திரசோழீஸ்ரர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் வள்ளி தேவசேனா சுப்ரமணியசுவாமி சன்னதி உள்ளது. இச்சன்னதியில் கடந்த 4ந்தேதி முதல் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்த நிலையில் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா மிக விமர்சியாக நடந்தது.

முன்னதாக கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில் உற்சவ முருகபெருமான் அலங்கரிக்கப்பட்டு சூரசம்ஹார பக்தர்கள் திரளாக சமூக இடைவேளியுடன் கலந்து கொண்டு முருக பெருமான் பல்வேறு அவதாரங்களில் அவதரித்து வந்து சூரபத்மனை வேலால் வதம் செய்து சூர சம்ஹாரம் நிகழ்வை கண்டு கழித்தனர்.

இந்த வழிபாட்டில் பக்தர்கள் அரசின் உத்தரவுப்படி சமுக இடைவெளியோடு மாஸ்க் அணிந்து கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கந்த சஷ்டி திருக்கல்யாண விழாக்குழு மற்றும் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். அபிஷேக அர்ச்சனைகளை சிவக்குமார் சிவாச்சாரியார் அவர்கள் சிறப்புடன் செய்து இருந்தார்.

செய்திகள் – ஆனந்த்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed