December 8, 2021

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா மிக சிறப்பாக துவங்கியது, மதுபான கடைகளை மூட மாவட் ஆட்சியர் உத்தரவு …

1 min read
Spread the love

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் பஞ்சமூபர்த்திகள் கோயில் வளாகம் ஐந்தாம் பிரகாரத்தில் மாட வீதி உலா திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது.

திருவண்ணாமலையில் நேற்று கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது அதனையொட்டி காலை பஞ்சமூர்த்திகள் கொடிமரத்திற்கு முன்பு தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் பின்பு கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் விநாயகர் அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன் முருகன் வள்ளி தெய்வானை அம்மன் சண்டிகேஸ்வரர் ஆகியோர் மாட வீதி உலா வந்தனர் .

இரவு பஞ்சமூர்த்திகள் கொட்டும் மழையில் மாட வீதி உலா வந்தனர் கொரோனா காலகட்டத்தில் அரசு விதித்துள்ள விதிப்படி கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் சாமி வீதி உலா வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 4 மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது .

விழாவை முன்னிட்டு வருகிற 14-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மற்றும் கிரிவலப் பாதைக்கு அருகில் இயங்கிவரும் திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் திருவண்ணாமலை நகரத்தில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள் ஓட்டல்களிலும் இணைந்த மதுக்கூடங்கள் வேங்கிக்காவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகியவை 4 நாட்களுக்கு மது விற்பனை நடைபெறாமல் மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா முருகேஷ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed