November 27, 2021

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகளே இல்லாமல் சம்பிரதாயதிற்க்கு நடைபெற்ற வேளாண்மை துறையின் விழிப்புணர்வு பிரச்சாரம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை 2021 முன்னேற்பாடு குறித்து நடைபெற்ற கூட்டத்திற்கு வேளாண்மை துறை சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து வெளியே சென்ற போது மழை வேகமாகப் பெய்து கொண்டிருந்தது. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர் தயாரிக்கப்பட்டு அந்த பேனரை எங்கு வைப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நிலையில் சிலர் கூறிய கருத்துகளை ஏற்று வாகனத்திலேயே பேனரை கட்டி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக புகைப்படமும் எடுத்துக் கொண்டு வண்டி வேகமாக கிளம்பியது.

கட்டி வைத்த பேனர், வாகனம் புறப்பட்டு செல்லும் போது கழன்று காற்றில் வெளியே பறந்து விழுந்து விடும் நிலையில் சென்றது. பொது மக்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் அவசரகதியில் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் விவசாயத் துறையினர் இப்படி பேனர் பிரச்சாரத்தை செய்தது பொன்னேரி விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பருவமழை பெய்து விவசாய நிலங்கள் முற்றிலுமாக சேதமடைந்து வரும் நிலையில் இப்படி ஒரு சம்பிரதாயதிற்க்கு வேலை செய்த விவசாயத் துறையை கண்டித்து சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கதை வெளிப்படுத்தினர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed