November 27, 2021

கும்மிடிப்பூண்டி மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மற்றும் பொதுமக்களுக்கு தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜே.மோகன் பாபு உணவு அளித்தார்…

1 min read
Spread the love

மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மண்டல பொறுப்பாளர் எஸ்.ஜோயல் அவர்களின் உத்தரவு படியும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ அவர்களின் ஆலோசனைப்படி,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் கிராம வில்லியர் காலனி, பன்னூர் கிராமம் பழங்குடி மக்கள், பஸ் ஸ்டாண்ட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பருவ மழை பெய்து வாழ்வாதாரம் இழந்து வீடுகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்
ஜே.மோகன்பாபு ஏற்பாட்டில் 1000 பேருக்கு மதிய உணவு தயாரித்து வாகனங்கள் மூலம் மக்கள் உள்ள பகுதிகளுக்கு வீதிவதியாக சென்று உணவளித்தார்.

இதில் முரளி எஸ்வந்த், குமார், பாஸ்கர், பாபு, ஆர்க்கிடெக் மணி, கார்த்திக், ஞானசேகர், லோகேஷ்,வெங்கடேசன், முரளி, மஸ்தான், பரத் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed