December 8, 2021

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு வெள்ள சேதங்களை பார்வையிட்டது…

1 min read
Spread the love

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள பகுதிகளை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி , அவர்கள் தலைமையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் ஆகிய அமைச்சர்கள் கொண்ட குழு 12-11-2021 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் .

கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர்.அதுல்ய மிஸ்ரா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் முனைவர்.க.பாஸ்கரன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் செயலர் திரு.சமயமூர்த்தி , வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் தஅண்ணாதுரை , மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.அ.அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர், நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கெளதமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் திருவிடமருதூர் ஊராட்சி அருந்தவம்புலம் கிராமத்தில் கனமழையால், நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்ததாவது..
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக , குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வந்த காரணத்தினால் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

ஆகவே,மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்ளில் பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை சேகரித்து அறிக்கை உடனுக்குடன் அளித்திடவும் அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு தினங்களில் அதிக அளவாக 32 செ.மீ மழை பொழிவு காரணமாக சுமார் 60,000 ஹெக்டேர் சம்பா பயிர்கள் , தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 7000 ஹெக்டேர் அளவு பாதிப்பு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. விவசாயப்பெருமக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து ஆறுகள்,குளங்கள், ஏரிகள்,வாய்க்கால் மற்றும் வடிகால்கள் தூர்வாரப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகைக்கு பதிவு செய்ய கடைசி தேதி 15-11-2021 என்பதால் விவசாய பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு மீதமுள்ள 3 நாட்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பயிர் காப்பீட்டுத்தொகைக்கு பதிவு செய்யலாம். மேலும், இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். அதனைத்தொடர்ந்து பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டதற்கு தகுந்தாற்போல் விவசாய பெருமக்களுக்கு உரிய உதவி தொகை வழங்கவும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும்காலத்தில் விவசாய பெருமக்களுக்கு உதவும் வகையில் ஒரு சிறப்பு வேளாண்மை திட்டம் செயல்படுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்களிடம் பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, வேளாண்மை இணை இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.தனபால் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன் / நாகபட்டினம்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed