December 8, 2021

ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன் அம்மா உணவகம் மற்றும் சாலைகளை ஆய்வை மேற்கொண்டார்…

1 min read
Spread the love

ராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகிலுள்ள அம்மா உணவகத்தை முனிசிபல் ஆர். ஒ முத்துச்செல்வம் அவர்கள் முன்னிலையில் எஸ். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து பின் கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பழுதடைந்துள்ள மின் விளக்குகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கருவியையும் உடனே சரி செய்து தரும்படியும் சமையலறையில் பாய்லர் மாற்றவும் ஆர்.ஓ அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அதன்பின்பு புதிய பேருந்து நிலையம் முதல் சங்கரன்கோவில் முக்கு வரை பாதாள சாக்கடை தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கும் பணியை பார்வையிட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் விரைவில் சாலையை அமைக்குமாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பி . ராமமூர்த்தி அவர்கள் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed