November 27, 2021

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா பஞ்சமூர்த்திகள் அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் எழுந்தருளி ஐந்தாம் பிரகாரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பவனி…

1 min read
Spread the love

திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் உற்சவத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளி மகா தீபாராதனை நடைபெற்று பின்னர் ஐந்தாம் பிரகாரத்தை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர், ஏராளமான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாமிதரிசனம் செய்தனர்.

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 6 நாட்களாக திருக்கோவிலில் காலையும் மாலையும் சாமி ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்த நிலையில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஏழாம் நாள் உற்சவத்தில் இன்று விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு

திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக வண்ண மலர்களால் பூமாலை அலங்காரம் நடைபெற்று பின்னர் திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள கம்பத்திளையனார் முருகன் அருணகிரியாருக்கு காட்சி அளித்த சன்னதி முன்பு பஞ்சமூர்த்திகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்று பின்னர் ஐந்தாம் பிரகாரத்தில் பஞ்சமர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று பக்தர்களுக்கு
காட்சி அளித்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவாக கருதப்படும் தீபத் திருவிழா வரும் 19 ஆம் தேதி அதிகாலையில் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபமும் அன்று மாலை 6 மணியளவில் திருக்கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed