December 8, 2021

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நவம்பர்-14 குழந்தைகள் தினத்தினையொட்டி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் ராக்கி கட்டி தோழமையாக ஏற்றுக்கொண்டார்.

1 min read
Spread the love

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நவம்பர்-14 குழந்தைகள் தினத்தினையொட்டி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் ராக்கி கட்டி தோழமையாக ஏற்றுக்கொண்டார். திருவாரூர் மாவட்ட சைல்டுலைன்-1098 சார்பாக வருடந்தோறும் நவம்பர்-14 குழந்தைகள் தினத்தையொட்டி நவம்பர்-14 முதல் நவம்பர்-19 வரை குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் , இவ்வாண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகளுக்கு ராக்கி கட்டி, வாழ்த்துமடல் மற்றும் இனிப்பு வழங்கி தோழமையாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து, குழந்தைகளிடம் கலந்துரையாடினார். குழந்தை திருமணம் தடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் 24 மணி நேர இலவச அவசர தொலைபேசி எண்ணான 1098 -ஐ தொடர்பு கொண்டு உதவி கோர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன், கூறினார் .

இந்நிகழ்வில் சைல்டுலைன் இயக்குனர் சி.ஜீவானந்தம், சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பிரகலாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்செல்வி , உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed