December 8, 2021

திருவள்ளூர் மாவட்டம், அவுரிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 560 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவுரிவாக்கம் ஊராட்சியில் அடங்கிய பாக்கம்,அவுரிவாக்கம் கீழ்குப்பம்,அவுரிவாக்கம் காலனி,கணவான் துறை,கணவான் துறை பழங்குடி கிராமம் உள்ளிட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆரணி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு அவதியுற்றனர். இந்த நிலையில் இந்த கிராமங்களைச் சேர்ந்த 560 குடும்பங்களுக்கு கிருஷ்ணகிரி ஐ.வி.டி.பி நிறுவனம் சார்பில் அரிசி மற்றும் போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை ஐ.வி.டி.பி நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் நேரடியாக இந்த குடும்பங்களுக்கு வழங்கினார். அவருடன் போப் எவர் பவுண்டேஷன் நிறுவனர் ஜோஸ்லின் கயல்விழி, ஒருங்கிணைப்பாளர் சக்கரவர்த்தி மற்றும் சார்த்திபா, சம்பத் உள்ளிட்டோர் இருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed